அவசர சிகிச்சை பிரிவில் செவிலியர்கள் டிக் டாக் வீடியோ

வீடியோவில் பாலிவுட் பாடல்களுக்கு செவிலியர்கள் ஆட்டம்
அவசர சிகிச்சை பிரிவில் செவிலியர்கள் டிக் டாக் வீடியோ
x
ஒடிஷா மாநிலம் மால்கான்கிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் அவசர சிகிச்சை பிரிவு உள்ளது. இங்கு பணிபுரியும் செவிலியர்கள், பாலிவுட் பாடல்களுக்கு ஆடிப்பாடி, டிக் டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டதாக சர்ச்சை எழுந்தது. அதில் சீருடையுடன் செவிலியர்கள்  பாடல்களுக்கு ஆடிப்பாடுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் மருத்துமனை நிர்வாகம் சார்பில் செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்