ஏர்-இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: லண்டன் விமானநிலையத்தில் அவசர தரையிறக்கம்

மும்பையிலிருந்து அமெரிக்காவின் நியூஜெர்சி நோக்கி சென்ற ஏர்-இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து லண்டனில் அவசரமாக தரை இறக்கப்பட்டது.
ஏர்-இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: லண்டன் விமானநிலையத்தில் அவசர தரையிறக்கம்
x
நியூஜெர்சி நோக்கி, ஏர்-இந்தியா விமானம், லண்டன் வான்பரப்பில் சென்ற போது விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து லண்டன் விமான நிலையத்தில், தரையிறக்கப்பட்ட ஏர்-இந்தியா விமானத்தில், தீவிர சோதனை நடைபெற்றது. இந்நிலையில், சோதனையின் போது, வெடிகுண்டு எதுவும் கிடைக்காத நிலையில், அந்த தகவல் வதந்தி என தெரிய வந்தது. இதனையடுத்து விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் 28 பேர் பிசினஸ் வகுப்பிலும் ஒரு குழந்தை உள்பட 266 பேர் எகனாமிக் வகுப்பிலும் பயணம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்