சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

பிரதிஷ்டை தின பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு
x
பிரதிஷ்டை தின பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. கண்டரு ராஜீவ் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றினார். வழக்கமான பூஜை மற்றும் நெய் அபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து பகல் பன்னிரண்டரை மணிக்கு பிரதிஷ்டை தின சிறப்பு பூஜை தீபாராதனை நடைபெற உள்ளது. மீண்டும் நண்பகல் 1 மணிக்கு அடைக்கப்படும் நடை, ஆனி மாத பூஜைக்காக வரும் 15ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்