விவசாயிகளை பிரித்துப் பார்க்க மாட்டோம் - சிவக்குமார், கர்நாடகா நீர்பாசன அமைச்சர்

கர்நாடகாவை பொறுத்தவரை, கர்நாடகா விவசாயிகள், தமிழக விவசாயிகள் என பிரித்துப் பார்க்கமாட்டோம் என கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
x
சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான் அதேநேரம், காவிரியில் எவ்வளவு நீர்வரத்து உள்ளது என்பதும் முக்கியமானது. நீர்வரத்து இல்லாதபோது, ஆணையத்தின் தீர்ப்பை எப்படி எடுத்துக்கொள்ள முடியும் இங்குள்ள விவசாயிகளையும், பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும். காவிரி நீர் வரத்து தொடர்பாக, பின்னர் விளக்கமாக சொல்கிறேன் கர்நாடகாவை பொறுத்தமட்டில், அனைத்து நிலைகளையும் ஆராய்வோம். எங்களைப் பொறுத்தவரை, கர்நாடகா விவசாயிகள், தமிழக விவசாயிகள் என பார்க்கமாட்டோம் அனைவரையும் பாதுகாக்க விரும்புகிறோம்.


Next Story

மேலும் செய்திகள்