பாஜக வெற்றி பெறும் என்ற கருத்துக் கணிப்பால் 2 ஆயிரம் கிலோ இனிப்புகளுக்கு ஆர்டர் கொடுத்த வேட்பாளர்

பாஜக வேட்பாளர் ஒருவர் 2 ஆயிரம் கிலோ இனிப்புகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார்.
பாஜக வெற்றி பெறும் என்ற கருத்துக் கணிப்பால் 2 ஆயிரம் கிலோ இனிப்புகளுக்கு ஆர்டர் கொடுத்த வேட்பாளர்
x
பாஜகவுக்கு வெற்றி நிச்சயம் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில் பாஜக வேட்பாளர் ஒருவர் 2 ஆயிரம் கிலோ இனிப்புகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார். மும்பை வடக்கு தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் கோபால் ஷெட்டி இந்த முறையும் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்மிளா போட்டியிட்ட நிலையில் கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாகவே வந்துள்ளது. எப்படியும் மீண்டும் தனக்கு வெற்றி கிடைக்கும் என மகிழ்ந்து போன அவர் 2 ஆயிரம் கிலோ இனிப்புகளுக்கு ஆர்டர் கொடுத்தார். இதையடுத்து மோடி முகமூடி அணிந்து கொண்ட தொழிலாளர்கள் விதவிதமான இனிப்புகளை உற்சாகமாக தயாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்