தேர்தல் கருத்து கணிப்பு முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம்
இன்றைய காலை வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய ஏற்றம் காணப்பட்டது.
இன்றைய காலை வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஆயிரத்து 318 புள்ளிகள் அதிகரித்து 39 ஆயிரத்து 249 புள்ளிகளில் வர்த்தகமானது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி, 408 புள்ளிகள் அதிகரித்து 11 ஆயிரத்து 815 புள்ளிகளில் வர்த்தகமானது. அதேபோல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து 69 ரூபாய் 61 காசுகளாக உள்ளது.
தேர்தல் கருத்துகணிப்புகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வந்துள்ளதே, சந்தைகளின் உயர்வுக்கு காரணம் என பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், கருத்துக்கணிப்பை பயன்படுத்தி செயற்கையாக பங்கு மதிப்பை உயர்த்துவது போன்ற முறைகேடுகளை நடப்பதை தடுக்க இந்திய பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியமான செபி கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
Next Story

