5ம் கட்ட வாக்குப்பதிவு - தலைவர்கள் வாக்களிப்பு

மக்களவை தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய தலைவர்கள் வாக்களித்தனர்
5ம் கட்ட வாக்குப்பதிவு - தலைவர்கள் வாக்களிப்பு
x
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாக்களிப்பு


மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பாஜக சார்பில், லக்னோ தொகுதியில் போட்டியிடும் அவர், வாக்குப் பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் வாக்களித்து சென்றார்.  

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வாக்களிப்பு


உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள வாக்குச் சாவடியில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி வாக்களித்தார். மான்டெசரி பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில்  அவர் வாக்களித்தார்.

அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வாக்களிப்பு


மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வாக்களித்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள வாக்குச் சாவடிக்கு அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தனது மனைவியுடன் சென்று வாக்களித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வாக்களிப்பு


ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா வாக்களித்தார். அவரது மகனும், மத்திய அமைச்சருமான ஜெயந்த் சின்கா,  இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.Next Story

மேலும் செய்திகள்