நான்காவது கட்டத் தேர்தல் களத்தில் ஸ்டார் வேட்பாளர்கள்

நான்காவது கட்டத் தேர்தலில் நடிகை ஊர்மிளா, பிரபலங்களின் வாரிசுகள் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
நான்காவது கட்டத் தேர்தல் களத்தில் ஸ்டார் வேட்பாளர்கள்
x
பீகார் மாநிலம் பெகுசாராய் தொகுதியில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை எதிர்த்து மாணவர் தலைவர் கன்னையா குமார் போட்டியில் உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நடிகை ஊர்மிளாவும் வடக்கு மத்திய மும்பை தொகுதியில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சகோதரி பிரியா தத்தும் அவரை எதிர்த்து, பாஜக சார்பில் பூனம் மகாஜனும் களத்தில் உள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் உன்னாவ் தொகுதியில் பாஜக சார்பில் சாமியார் சாக்ஷி மகராஜ் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக இருக்கின்றனர். இதேபோல் ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் ஜோத்பூர் தொகுதியிலும் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேயின் மகன் துஷ்யந்த் என ஏராளமான பிரபலங்களின் வாரிசுகள் 4ம் கட்ட தேர்தலில் களத்தில் உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்