என்.டி.ஆர் மனைவி மீது பாலியல் புகார் : உதவியாளரின் புகாரால் ஆந்திராவில் பரபரப்பு

என்.டி. ராமராவ் மனைவி லட்சுமி பார்வதி மீது பாலியல் புகார் எழுந்திருப்பது, ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்.டி.ஆர் மனைவி மீது பாலியல் புகார் : உதவியாளரின் புகாரால் ஆந்திராவில் பரபரப்பு
x
என்.டி. ராமராவ் மனைவி லட்சுமி பார்வதி மீது பாலியல் புகார் எழுந்திருப்பது, ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் உதவியாளராக செயல்பட்டு வந்த கோட்டி என்பவர் வினுகொண்டா காவல்நிலையத்தில் அளித்த புகாரில், லட்சுமி பார்வதி கடந்த சில காலமாக தமக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். அவரது விருப்பத்துக்கு தாம் அடிபணியாததால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டுவதாகவும் கோட்டி தெரிவித்துள்ளார். உடனடியாக லட்சுமி பார்வதி மீது நடவடிக்கை எடுத்து, தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்