சிக்கிய வீரர்கள் - இதுவரை நடந்தது என்ன?

இதுவரை பாகிஸ்தானிடம் சிக்கிய வீரர்கள், அவர்கள் விடுவிக்கப்பட்டது மற்றும் ஜெனீவா ஒப்பந்தம் தொடர்பான தொகுப்பு...
x
மோசமான விளைவுகளை ஏற்படுத்திய இரண்டாம் உலகப்போருக்கு பின், போர் நடவடிக்கைளை நெறிமுறைபடுத்த கடந்த 1949 -ஆம் ஆண்டு ஜெனீவா ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இதில் 195 நாடுகள் கையெழுத்திட்டன. ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, பிடிபடும் போர் கைதிகளை எந்தவிதத்திலும் தண்டிக்க கூடாது. அவர்களை போரிலிருந்து தடுத்து வைப்பது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. போர் முடிந்த மறுகணமே அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கைது செய்யப்பட்ட போர் கைதிகளை மனித நேயத்துடன் நடத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் கைதிகளிடம் வன்முறையை பிரயோகிக்கவோ அல்லது அவமானப்படுத்தவோ கூடாது என்றும் போர் கைதிகள் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றால், அவர்களை அச்சுறுத்தவோ அல்லது மோசமாக நடத்தவோ கூடாது என்றும் ஜெனீவா ஒப்பந்தம் கூறுகிறது. இந்தநிலையில், கடந்த 1999-ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் போது இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமானி நச்சிகேட்டா பாகிஸ்தான் படைகளால் சிறை பிடிக்கப்பட்டார். இந்தியா மேற்கொண்ட தீவிர முயற்சியை தொடர்ந்து, 8 நாட்களுக்கு பின் செஞ்சிலுவை சங்கம்  மூலம் அவரை  பாகிஸ்தான்  ஒப்படைத்தது. இதபோல் பாகிஸ்தான் வீரர்கள் எட்டு பேரையும் இந்திய ராணுவம் சிறைபிடித்தது. பின்னர் 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்அவர்கள் அனைவரும்  பாகிஸ்தானிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர். கடந்த 2016 ஆம் ஆண்டு ராஷ்ட்ரிய ரைபில்ஸ் படையில் பணியாற்றி வந்த சவான் என்ற வீரர், தற்செயலாக எல்லையை கடந்து பாகிஸ்தான் சென்றார். இவர் பாகிஸ்தான் வசம் சிக்கி சிறையில் அடைக்கப்பட்ட விவரம் துல்லிய தாக்குதல் நடைபெற்ற பிறகு தெரியவந்தது. இதனையடுத்து அவரை விடுவிக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து 4 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவானை பாகிஸ்தான் விடுவித்தது. மனிதாபிமான அடிப்படையிலும், எல்லையில் அமைதியை உறுதி செய்யும் நோக்கிலும் அவர் விடுவிக்கப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்தது. 

Next Story

மேலும் செய்திகள்