இந்திய விமானப்படையின் துல்லிய தாக்குதலின் புகைப்படங்கள் வெளியீடு

இந்திய விமானப்படையின் துல்லிய தாக்குதலின் புகைப்படங்களை உளவுத்துறை வெளியிட்டுள்ளது.
x
பாகிஸ்தானின் பலகோட்டில், ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முக்கிய தளபதிகளான, மவுலான அம்மர், மவுலானா தல்ஹானா சாயிஃப், முஃப்தி அசார் கான் மற்றும், இப்ராஹிம் அசார் உள்ளிட்டோர் குறி வைக்கப்பட்டதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதலில் கொல்லப்பட்ட 4 பேரின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ள உளவுத்துறை, மவுலான தல்ஹானா சா​யிஃப் மற்றும் இப்ராஹிம் அசார் இருவரும், மசூத் அசாரின் சகோதரர்கள் என உளவுத்துறை தெரிவித்துள்ளது. பலகோட் தற்கொலைப்படை பயிற்சி முகாம் படிக்கட்டுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டு கொடிகள் வரையப்பட்டிருந்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்