இடைக்கால பட்ஜெட் : தனிநபர் வருமான வரியில் அதிரடி சலுகைகள்

தனிநபர் வருமான வரியில் அதிரடியாக பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது
x
2019-20 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று மக்களவையில் நிதியமைச்சர் பொறுப்பை வகிக்கும் அமைச்சர் பியூஷ்கோயல் தாக்கல் செய்தார். அதன்படி,வருமான வரி உச்ச வரம்பு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாத சம்பளதாரர்களில் வருமான வரி நிரந்தர கழிவு 40 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக  இனிமேல் ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்  வரையிலான வருமானத்துக்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை. இரண்டாவது வீடு வாங்கும்போதும் வீட்டுக்கடன் வரிச் சலுகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி வட்டியில் இருந்து வருமானத்துக்கு தனியாக 50 ஆயிரம் ரூபாய் விலக்கு அளிக்கப்படும். சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்த 2 வது வீடு வாங்கினால் வருமான வரியில் சலுகை கிடைக்கும். வீட்டு வாடகை கழிவுக்கான உச்ச வரம்பு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயில் இருந்து  2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை வரிச்சலுகை. இந்த அறிவிப்புகள் மூலம் நாடு முழுவதும் 3 கோடி  நடுத்தர வர்க்கத்தினர் பயனடைவார்கள் என்றும் பியூஷ் கோயல் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்