இடைக்கால பட்ஜெட் : முக்கிய அறிவிப்புகள்

2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என நிதி நிலை அறிக்கை தாக்கலின் போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
x
* 2019-20 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று மக்களவையில் நிதியமைச்சர் பொறுப்பை வகிக்கும் அமைச்சர் பியூஷ்கோயல் தாக்கல் செய்தார்.

* 2022 ஆம் ஆண்டில் புதிய இந்தியாவை படைக்கும் திசையில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம் என்றும், 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

* உலகில் மிக விரைவாக வளரும் பொருளாதாரம், இந்தியப் பொருளாதாரம் என்று குறிப்பிட்ட அவர், நிதிபற்றாக்குறை 3.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

* நடப்பு கணக்கு பற்றாக்குறை இந்த ஆண்டு 2.5 சதவீதமாக இருக்கும் என்றார். 

* நாட்டில் வளர்ச்சி உயர்ந்து வருவதாகவும், பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

* மத்திய அரசின் மாநிலங்களுக்கான பங்களிப்பு 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் நாட்டில் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்கியிருக்கிறோம் என தெரிவித்த அமைச்சர், பினாமி சட்டம் மற்றும் ரேரா சட்டத்தின் மூலம் ரியல் எஸ்டேட் துறை மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

* நிலக்கரி மற்றும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்பட்டுள்ளது என்றும், உலகில் ஆறாவது மிகப்பெரிய பொருளாதாரம் இந்தியப் பொருளாதாரம் என்பதை சுட்டிக் காட்டிய அவர், கிராமப்புற சுகாதாரம் 98 சதவீத அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

* நாடு முழுவதும் 5.4 லட்சம் கிராமங்களில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என கூறிய அவர்,2019-20 ஆம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும், தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் நிதி இந்த திட்டத்திற்கு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

* பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின்கீழ், சுமார் 15 லட்சம் குடியிருப்புகள் சாலைகளோடு இணைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த திட்டத்திற்கு 2019-20 நிதியாண்டில் 19 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

* சௌபாக்கியா திட்டத்தின்கீழ், அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும், 143 கோடி எல்ஈடி பல்ப் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.

* உலகின் மிகப்பெரிய காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும்,  இதுவரை சுமார் 10 லட்சம் பேர் இந்த திட்டத்தில் பயன் அடைந்துள்ளனர் என்றும் அமைச்சர் திரு பியூஷ்கோயல் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்