காந்தியடிகளின் 72 வது ஆண்டு நினைவு தினம் : பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மலர் தூவி அஞ்சலி

மகாத்மா காந்தியின் 72வது நினைவு தினம், நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.
காந்தியடிகளின் 72 வது ஆண்டு நினைவு தினம் : பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மலர் தூவி அஞ்சலி
x
மகாத்மா காந்தியின் 72வது நினைவு தினம், நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இன்று தியாகிகள் தினமும் அனுசரிக்கப்படுவதால், இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தலைமையில் ராணுவ வீரர்கள் காந்தியடிகளுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனிருந்தார். முன்னதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர், காந்திக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், "ரகுபதி ராகவ ராஜா ராம்" என்ற பஜனை பாடல் இசைக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்