அரசுப் பேருந்து - லாரிக்கு நக்சலைட்டுகள் தீ வைப்பு

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அரசு பேருந்து மற்றும் லாரியை நக்சலைட்டுகள் தீ வைத்து எரித்துள்ளனர்.
அரசுப் பேருந்து - லாரிக்கு நக்சலைட்டுகள் தீ வைப்பு
x
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அரசு பேருந்து மற்றும் லாரியை நக்சலைட்டுகள் தீ வைத்து எரித்துள்ளனர். சரிவெல்லா என்ற கிராமம் அருகே நிகழ்ந்த இச்சம்பவத்தில், சாலையின் குறுக்கே மரங்களை வெட்டிப்போட்ட நக்சலைட்டுகள், அந்த வழியாக வந்து கொண்டிருந்த தெலுங்கானா மாநில அரசு பேருந்து மற்றும் லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி உள்ளனர். பேருந்தில் இருந்த பயணிகளை மிரட்டி கீழே இறங்கச் செய்த அவர்கள், பேருந்து மற்றும் லாரியை தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். வருகிற 31ம் தேதி பந்த் நடத்த நக்சலைட் இயக்கம் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இந்த தீ வைப்பு சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்