இன்று 70வது குடியரசு தின கொண்டாட்டம்

இந்திய நாட்டின் 70வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று 70வது குடியரசு தின கொண்டாட்டம்
x
தலைநகர் டெல்லியில் ரஃபி மார்க், மான்சிங் சாலை, நொய்டா எல்லை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சாலையின் நடுவே தடுப்புகள் அமைத்த போலீசார், வாகனங்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். இதேபோல், மும்பையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேற்கு நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், வாகனங்களை மறித்து சோதனை செய்தனர். இதேபோல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையான கதுவா பகுதியில் நவீன ரக துப்பாக்கிகளுடன் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சாலைகளில் சென்ற வாகனங்களை போலீசார் மறித்து ஆவணங்களை சரிபார்த்து அனுப்பினர். 


Next Story

மேலும் செய்திகள்