மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - இஸ்ரோ தலைவர் சிவன்
பதிவு : ஜனவரி 18, 2019, 03:25 PM
மாற்றம் : ஜனவரி 18, 2019, 03:27 PM
மாணவர்கள் பயன்பெறும் வகையில் இளம் விஞ்ஞானி திட்டத்தை இஸ்ரோ அறிமுகப்படுத்துவதாக அதன் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த திட்டத்துக்காக மாநிலங்கள் வாரியாக தலா மூன்று மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இஸ்ரோவில் செயற்கைகோள் உருவாக்குவது தொடர்பான பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த ஒரு மாத கால பயிற்சியில்,  8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும், தேர்வாகும் மாணவர்கள் இஸ்ரோவின் ஆராய்ச்சி கூடம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் நேரில் கண்டு அவர்களை மேம்படுத்திக்கொள்ளவும், விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடவும் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

* மேலும் மாணவர்களை கொண்டு ஒரு சிறிய செயற்கைகோள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார். மாநில அரசுகளின் உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதில் தேர்வாகும் மாணவர்களுக்கான அனைத்து செலவுகளையும் இஸ்ரோவே ஏற்கும் என்று அப்போது அவர் தெரிவித்தார். 

* நாடெங்கிலும் மையங்களை திறக்கவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர், விரைவில் திருச்சி, நாக்பூர், உள்ளிட்ட 4 இடங்களில் மையங்களை திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

* மேலும் நாடெங்கிலும் கன்னியாகுமரி, ஜெய்ப்பூர், வாரணாசி உள்ளிட்ட 6 இடங்களில் ஆராய்ச்சி மையங்களை ஏற்படுத்தவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். மேலும் சிறிய ரக செயற்கைகோள் ஒன்றை தயாரிக்கவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

648 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3313 views

பிற செய்திகள்

பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்

முதன்முறையாக மின்மயமாக்கப்பட்ட டீசல் ரயிலை துவக்கி வைக்கிறார் : பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைக்கிறார் மோடி

48 views

புல்வாமாவில் பலியான 23 வீரர்களின் கடன் தள்ளுபடி

புல்வாமாவில் பலியான 23 வீரர்களின் கடன் தள்ளுபடி எஸ்பிஐ அறிவிப்பு

222 views

புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன் சுட்டுக்கொலை : ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றவன் என தகவல்

காஷ்மீர் மாநிலம், புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி அப்துல் ரஷீத் ஹாஜியை, பாதுகாப்பு படையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றுள்ளனர்.

68 views

நாடு திரும்பிய பாகிஸ்தான் தூதர்

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோகைல் முகமது டெல்லியில் இருந்து பாகிஸ்தான் புறபட்டு சென்றார்

357 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.