அலோக் வர்மா நியமனம் முதல் பணியிட மாற்றம் வரை நடந்தது என்ன...?
பதிவு : ஜனவரி 11, 2019, 06:55 PM
சிபிஐ இயக்குநர் பொறுப்பில், அலோக் வர்மா நியமனம் முதல் பணியிட மாற்றம் வரை நடந்தது என்ன என்பதை பார்ப்போம்..
* 2017 அக்டோபர் 23-ம் தேதி சிபிஐ-யின் சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நியமனம் செய்யப்பட்டார். இதற்கு அலோக் வர்மா எதிர்ப்பு தெரிவித்தார்

* நவம்பர் 28-ம் தேதி மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூஷன், அஸ்தானா நியமனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

* 2018 ஜூலை 12-ல் அலோக் வர்மா வெளிநாடு சென்றிருந்தபோது, அவசரமாகக் கூடிய  ஊழல் கண்காணிப்பு ஆணையம் அஸ்தானாவுக்கு கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு அளித்தது.

* ஆகஸ்ட் 24 சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, மற்றும் சில அதிகாரிகள் மீது, கூடுதல் இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஊழல் புகார் அளித்தார்.

* அக்டோபர் 15 ம் தேதி வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக லஞ்சம் வாங்கியதாக கூடுதல் இயக்குநர் அஸ்தானா மற்றும் சில அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது

* அக்டோபர் 22 -ல் சிபிஐ கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் தேவேந்திர குமாரை லஞ்சம் பெற்ற வழக்கில் சிபிஐ கைது செய்தது

* அக்டோபர் 24 -ல் சிபிஐ கூடுதல் இயக்குநர்  ராகேஷ் அஸ்தானா பணியிலிருந்து விடுவிக்கப்பட, 13 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அலோக் வர்மா பதவியில் இருந்து நீக்கப்பட்டு, புதிய இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர் ராவ் நியமிக்கப்பட்டார்.

* அக்டோபர் 6 -ல் பதவி நீக்கத்தை எதிர்த்து அலோக் வர்மா தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2019 - ஜனவரி 8- ல் அலோக் வர்மாவின் பதவி நீக்கம் செல்லாது என அறிவித்தது. 

* ஜனவரி 10 பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு குழு அலோக் வர்மாவை பணிமாற்றம் செய்து உத்தரவு.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.