20 லட்சம் பக்தர்களை எதிர்நோக்கும் 'கும்பமேளா'

மறு ஜென்மம், ஜென்ம புண்ணியம், தியான யோக நிலை, மனதளவில் துறவு, மரணம் என சர்வத்தையும் பாரம்பரிய விழா என்ற ஒற்றை வரியில் ஒழித்து வைத்திருக்கும் கும்பமேளாவுக்கு, உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் தயாராகி வருகிறது.
20 லட்சம் பக்தர்களை எதிர்நோக்கும் கும்பமேளா
x
கும்பமேளா என்ற ஒற்றை வார்த்தையில் நாட்டின் மொத்த கவனத்தையும் திசை திருப்புகிறது உத்தரபிரதேச மாநிலம். அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்கள், நகரங்கள், ஆற்றங்கரைகள், கடைவீதிகள் என அனைத்தும் தயாராகி வருகின்றன. இதற்காக 4 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த அந்த மாநில அரசு விரிவான ஏற்பாடுகள் செய்து வருகிறது.

ஆடை முதல் வாழ்வின் அனைத்தையும் துறந்த அகோரிகள், தியான முனிகள் உள்பட அங்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடி, கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய ஆறுகளில் புனித நீராடி பரவசமடைய உள்ளனர். இப்போதே எங்கு திரும்பினாலும் கலாச்சார பிரதிபலிப்பாக கசியும் வேத மந்திர ஒலி காதுகளை ஈர்க்கிறது. 

இங்கு நதிகளை போற்றி எடுக்கப்படும் மகா ஆரத்தி உள்பட யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற இந்த திருவிழாவுக்கு வர பல்வேறு நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள், உணவகங்கள், அடிப்படை வசதிகள் ஆகியவை முழு வீச்சில் தயாராகி வருகிறது. ஜனவரி 15-ம் தேதி தமிழகத்தின் பாரம்பரிய திருவிழா பொங்கல் பண்டிகை நாளில், அலங்காபாத்தை அலங்கரிக்கிறது கும்பமேளா.

Next Story

மேலும் செய்திகள்