28 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு - சினிமா டிக்கெட்டுகள் விலை குறையும்

சிமெண்ட், டிவி, டயர், உள்ளிட்ட பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.வரி குறைக்கப்பட்டுள்ளது.
28 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு - சினிமா டிக்கெட்டுகள் விலை குறையும்
x
சிமெண்ட், டிவி, டயர், உள்ளிட்ட பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.வரி குறைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின்  31-வது கூட்டத்தில்  பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். வரிகுறைப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறிப்பாக 28 சதவீத வரி விதிப்புக்குள் இருந்த  28 பொருட்கள் 18 சதவீத வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் வாகன உதிரி பாகங்கள் மற்றும் சிமெண்ட் பொருட்களும் உள்ளன என்றும், சிமெண்டுக்கான வரி குறைப்பின் மூலம் அரசுக்கு 13 ஆயிரம்  கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் என்றும், வாகன  உதிரி பாகங்களுக்கான வரி குறைப்பின் மூலம் 20 ஆயிரம் கோடி  ரூபாய் வரி இழப்பு ஏற்படும் என்றும்  குறிப்பிட்டார். மத்திய அரசு அறிவித்துள்ள ஜி.எஸ்.டி.வரி குறைப்பின்படி, 

* ஜன் தன் கணக்கு சேவைக்கு வரி விலக்கு 

* 100 ரூபாய்க்குட்பட்ட சினிமா டிக்கெட்டுகளுக்கு 12 சதவீதமாக வரி குறைந்தது

* 100 ரூபாய்க்கு மேற்பட்ட சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

* டயர், பவர் பேங்க், டிவி, கணினி மானிட்டர், லித்தியம் அயன் பேட்டரிகள், டிஜிட்டல் கேமரா, வீடியோ கேமரா ரெக்கார்டர் -  28 சதவீதத்திலிருந்து  18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

* 34 ஆடம்பர பொருட்கள் மட்டும் 28 சதவீத வரியில் உள்ளன.

* ஊனமுற்றவர்களுக்கான உபகரணங்கள் வரி 28 சதவீதத்திலிருந்து  5 சதவீதமாக குறைந்துள்ளது.
 
* மாற்றியமைக்கப்பட்டுள்ள வரி விகிதங்கள் ஜனவரி 1 முதல் அமலாகும் என்றும் நிதியமைச்சர் அருண்ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்