மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்

மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
x
மேகதாது அணை விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவை அனுமதிக்கக் கூடாது என்றும், மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதியை ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவது உச்சநீதிமன்ற தீர்ப்பில் நேரடியாக தலையிடுவதாகும் என வாதிட்டார். மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கிய பிறகே விரிவான ​திட்ட அறிக்கை தயாரித்தோம் என கர்நாடகா அரசு தரப்பு விளக்கம் அளித்தது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் அனுமதியின்றி எந்த முடிவும் எடுக்கப்படாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்தது. முத்தரப்பு வாதத்தை கேட்ட பிறகு பேசிய நீதிபதிகள், இது தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் எப்படி மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்