சபரிமலை விவகாரம் - காங். எம்.எல்.ஏக்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட முயற்சி

கேரள சட்டப்பேரைவையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.
சபரிமலை விவகாரம் - காங். எம்.எல்.ஏக்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட முயற்சி
x
கேரள சட்டப்பேரவை நேற்று கூடியபோது காங்கிரஸ் உறுப்பினர் பி.சி.ஜார்ஜ் சபரிமலை விவகாரம் தொடர்பான தனிநபர் தீர்மானத்தை கொண்டு வந்தார். அதனை சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் ஏற்க மறுத்தார். இரண்டாவது நாளான இன்று, கையில் சபரிமலை விவகாரம் தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சட்டசபைக்குள் நுழைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர். 

இதனால் அங்கு கடும் அமளி ஏற்பட்டது. அமைதிபடுத்த முயன்ற சபாநாயகரின் இருக்கையை நோக்கிச் சென்ற எம்.எல்.ஏக்கள், அவருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டதால் சட்டப்பேரவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் அறிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்