"பிரபோதினி ஏகாதசி" தினம் - கங்கையில் புனித நீராடிய பக்தர்கள்

"பிரபோதினி ஏகாதசி"யை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதியில் பக்தர்கள் இன்று அதிகாலை முதலே புனித நீராடினர்.
பிரபோதினி ஏகாதசி தினம் - கங்கையில் புனித நீராடிய பக்தர்கள்
x
"பிரபோதினி ஏகாதசி"யை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதியில் பக்தர்கள் இன்று அதிகாலை முதலே புனித நீராடினர். கங்கை கரையில் மகாவிஷ்ணுவுக்கு பூஜைகள் செய்த பின்னர் பக்தர்கள், புனித நீராடி சுவாமியை வணங்கினர். பகவான் விஷ்ணு ஆடி மாத ஏகாதசியான தேவசயன ஏகாதசி அன்று உறங்க ஆரம்பித்து நான்கு மாதங்கள் உறங்கிய பின், பிரபோதினி ஏகாதசி அன்று கண் விழிக்கிறார். எனவே, பிரபோதினி ஏகாதசி விரதமிருந்தால் ஒருவரின் ஆயிரம் முந்தைய பிறவிகளின் பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்