அயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

அயோத்தி வழக்கை முன்கூட்டிய விசாரிக்க கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
அயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி
x
அயோத்தியில் ராமஜென்ம பூமி விவகாரம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளன. அந்த மனுக்களை அரசியல்சட்ட அமர்வு விசாரிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்தது. அடுத்த ஆண்டு ஜனவரி​ முதல் வாரத்தில், இந்த வழக்கை விசாரிக்கும் வகையில், புதிய அமர்வு அமைக்கப்பட்டு, அதன்பிறகு விசாரணை தொடங்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. 

ஆனால், அயோத்தி வழக்கை தாமதப்படுத்தக் கூடாது என இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி, 'இந்து மகாசபை' என்ற அமைப்பின் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Next Story

மேலும் செய்திகள்