"ரூபாய் நோட்டு மாற்றும் அறிவிப்பு மக்களிடம் உள்ள பணத்தை பறிமுதல் செய்ய அல்ல" - நிதியமைச்சர் அருண்ஜேட்லி

ரூபாய் நோட்டு மாற்றும் அறிவிப்பை 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் வெளியிட்டது, மக்களிடம் உள்ள பணத்தை பறிமுதல் செய்ய அல்ல என்று நிதியமைச்சர் அருண்ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.
ரூபாய் நோட்டு மாற்றும் அறிவிப்பு மக்களிடம் உள்ள பணத்தை பறிமுதல் செய்ய அல்ல - நிதியமைச்சர் அருண்ஜேட்லி
x
ரூபாய் நோட்டு மாற்றும் அறிவிப்பை 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் வெளியிட்டது, மக்களிடம் உள்ள பணத்தை பறிமுதல் செய்ய அல்ல என்று நிதியமைச்சர் அருண்ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.

 
* பதுக்கி வைக்கப்பட்ட பணத்தை முறையான பொருளாதாரத்திற்கு கொண்டு வருவதும், பதுக்கி வைக்கப்பட்ட பணத்துக்கு வரி வசூலிப்பதும் தான் அரசின் இலக்காக இருந்ததாகவும், மக்களின் பணத்தை பறிமுதல் செய்வதல்ல நோக்கம் என்றும் விளக்கம் அளித்துள்ளார். 

* ரூபாய் பயன்பாட்டை தவிர்த்து இணையதளம் மூலம் பணபரிவர்த்தனையை கொண்டு வர, பொருளாதார நடவடிக்கையை சற்று அசைத்து பார்க்க வேண்டிய நிலை இருந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

* கறுப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றான இதன் மூலம், வரி செலுத்துவோர் மற்றும் மறைமுக, நேரடி வரி வருவாய் அதிகரித்து, நாட்டின் நிதி பொருளாதாரம் ஆரோக்கியமான நிலைக்கு முன்னேறி உள்ளதாகவும் நிதியமைச்சர் பதிவிட்டுள்ளார்.

* இந்த நடவடிக்கை மூலம் வணிகவரி 19 புள்ளி 5 சதவீதமும், நேரடி வரி மற்றும் மறைமுக வரி விகிதமும் அதிகரித்துள்ளதாக அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். 

* இணையதள பரிவர்த்தனை 2 ஆண்டில் 50 கோடியில் இருந்து 59 ஆயிரத்து 800 கோடியாக அதிகரித்து உள்ளதாகவும், பீம் செயலி மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனை 2 ஆண்டுகளில் 70 ஆயிரத்து 600 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார். 

* வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தால், கடன் வழங்கும் திறனை அதிகரித்துள்ளதாகவும் அருண் ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்