அதிரடியாக உயிர் பெற்ற கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வழக்கு
பதிவு : நவம்பர் 07, 2018, 12:34 PM
அமலாக்கத்துறை வழக்கை முடித்து தருவதாகக் கூறி தனியார் நிறுவனத்திடம் 21 கோடி ரூபாய் பேரம் பேசிய கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை பெங்களூரு போலீசார் தேடி வருகின்றனர்.
அம்பிடன்ட் என்ற நிறுவனத்தின் மீதான அமலாக்கத்துறையின் வழக்குகளை முடித்து தருவதாக, அந்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, 21 கோடி ரூபாய் பேரம் பேசியுள்ளார். இதற்கான புகைப்பட ஆதாரங்கள் குற்றப்பிரிவு போலீசாருக்கு தற்போது கிடைத்துள்ளது. இதையடுத்து கைது செய்வதற்காக ஆந்திரா மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் ஜனார்த்தன ரெட்டியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் ஜனார்த்தன ரெட்டி முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்திற்குச் செல்ல இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கு நேற்று இடைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிரடியாக உயிர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ரூ. 21 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி ஆஜர்

நிதி நிறுவனத்திடம் இருந்து 21 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி பெங்களூரு குற்றபிரிவு போலீசார் முன்பு ஆஜரானார்.

129 views

பிற செய்திகள்

சென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள்

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வெளியூர் சென்றிருந்த மக்கள், சென்னை திரும்ப இன்று முதல் 3 ஆயிரத்து 776 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

17 views

காணும் பொங்கல் - மெரினா பாதுகாப்பு ஏற்பாடுகள்

சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் காணும் பொங்கலை முன்னிட்டு 4 லட்சம் பேர் மெரினா கடற்கரையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.

20 views

இளவட்டக்கல் தூக்கும் போட்டி அசத்திய இளைஞர்கள் - சாதித்த பெண்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

42 views

திமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி எங்கே? - பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி

திமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி பலமான கட்சியையும் பலவீனமாக மாற்றியதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

91 views

கன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் காதலி பலி

முறையற்ற பழக்கத்தால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடிகள் கன்னியாகுமரியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் காதலி உயிரிழந்தார்.

9 views

அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழு

அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் ஆப் குழுக்கள் ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.