சபரிமலை நடையை மூடுவேன் என தந்திரி அறிவித்த விவகாரம் - கேரள பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு
இளம்பெண்களை அனுமதித்தால், சபரிமலை கோயில் நடையை மூடுவேன் என தந்திரி அறிவித்தது தனது ஆலோசனையின்படி தான் என்று கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்துள்ளார்.
கோழிக்கோட்டில் நடந்த பாஜக இளைஞரணி கூட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீதரன் பிள்ளை ,சபரிமலை விவகாரம் தங்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு என கூறியுள்ளார் . பிரச்னை தீவிரமானபோது சபரிமலை கோயில் தந்திரி கண்டரருராஜீவரு தன்னை தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது, தனது ஆலோசனையின் படியே நடை மூடும் முடிவை தந்திரி அறிவித்தார் என்றும் ஸ்ரீ தரன் பிள்ளை குறிப்பிட்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.
Next Story

