ஜி.எஸ்.டி. வரி வசூல்- ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல், கடந்த அக்டோபர் மாதத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது.
ஜி.எஸ்.டி. வரி வசூல்- ரூ.1 லட்சம் கோடியை  தாண்டியது - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி
x
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கடந்த அக்டோபர் மாதத்தில், ஜி.எஸ்.டி வரி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயைக் கடந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். குறைந்த வட்டி விகிதம், குறைந்த வரி ஏய்ப்பு, மற்றும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியன தான் ஜிஎஸ்டி வெற்றிக்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்ட வேண்டும் என நிதித்துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்