அயோத்தி வழக்கு- ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைப்பு

அயோத்தி வழக்கில், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை, ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயோத்தி வழக்கு- ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைப்பு
x
அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி- பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பாக நீண்ட காலமாக வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2 புள்ளி 77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என கடந்த 2010-ல் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுக்கள் அனைத்தும், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை,  அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு விசாரணை ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்