இந்தியாவில் திருமணம் தாண்டிய உறவு எந்தளவு உள்ளது? - தேசிய குடும்பநல கள ஆய்வு முடிவுகள் வெளியீடு

இந்தியாவில் திருமணம் தாண்டிய உறவு என்பது, வெறும் ஒரு சதவீதத்தினரிடம் மட்டுமே இருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் திருமணம் தாண்டிய உறவு எந்தளவு உள்ளது? - தேசிய குடும்பநல கள ஆய்வு முடிவுகள் வெளியீடு
x
* மத்திய அரசின் சுகாதாரத்துறை சார்பாக 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் (National Family Health Survey) தேசிய குடும்பநல களஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்திய மக்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளை உள்ளடக்கிய இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. 

* அதில், சராசரியாக ஓர் இந்திய இளைஞன், முதன் முதலாக உறவு அனுபவம் பெறும் வயது 24 என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

* பிற நாடுகளோடு ஒப்பிட்டால் இந்திய இளைஞர்கள்தான் மிகத் தாமதமாக உறவு அனுபவத்தைப் பெறுகிறார்கள் என கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. 

* அதே போல, இந்தியப் பெண்கள் தங்கள் பத்தொன்பதாவது வயதில் முதல் தாம்பத்ய அனுபவம் பெறுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. 

* உலக நாடுகளோடு ஒப்பிட்டால் 19 என்பது ஒன்றும் தாமதமில்லை என்றும், அதே சமயம், மியான்மர் நாட்டில் பெண்கள் முதல் அனுபவம் பெறுவது 22 வயதுக்கு மேல் என கூறுகிறது இதே கருத்துக் கணிப்பு.

* தமிழகத்தை பொறுத்தவரை பெண்கள் 20 வயதுக்கு மேலும் ஆண்கள் 25 வயதுக்கு மேலும் முதல் அனுபவம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஆந்திராவில் தான் பெண்கள் மிக மிக சீக்கிரமாக பாலியல் அனுபவம் பெறுவதாக சொல்லும் இந்த ஆய்வு, ஆண்கள் மிக இளம் வயதில் உறவு அனுபவம் பெறுவது, மத்தியப்பிரதேசத்தில் என குறிப்பிட்டுள்ளது.

* ஆண்களில் 11 சதவீதம் பேரும் பெண்களில் 3 சதவீதம் பேரும் திருமணத்துக்கு முன்பே உடலுறவு அனுபவம் பெற்றுவிடுவதாக இந்த கருத்து கணிப்பு அதிர்ச்சியளித்துள்ளது.

* அதே சமயம், திருமணம் ஆன பின் வேறொருவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் ஆண்களில் 2 சதவீதம் பேர்தான் என்றும் பெண்களில் அது வெறும் ஒரு சதவீதம்தான் என்றும் இந்த சர்வே ஆறுதல் அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்