"2022ம் ஆண்டில் விண்ணிற்கு மனிதனை இந்தியா அனுப்பும்" - 'இஸ்ரோ' தலைவர் சிவன் தகவல்

இந்தியா சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டில், விண்ணுக்கு மனிதனை அனுப்பி சாதனை படைக்கும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டில் விண்ணிற்கு மனிதனை இந்தியா அனுப்பும் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
x
இந்தியா சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டில், விண்ணுக்கு மனிதனை அனுப்பி சாதனை படைக்கும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே, சிவன் படித்த சரக்கல்விளை அரசு பள்ளியில் இஸ்ரோ சார்பாக ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. அதில், இஸ்ரோ தலைவர் சிவன் பங்கேற்றார். விழாவுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,  மருத்துவமனைக்கு செல்லாமலேயே மருத்துவ வசதி பெறும், 'டெலி மெடிசன்' கருவியை இஸ்ரோ உருவாக்கி இருப்பதாகவும் விண்கலங்களை ஏவும் பெரிய ராக்கெட்டுகளை தயாரிக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்