மும்பையில் மாடல் அழகி கொலை..!

மும்பையில் மாடல் அழகியை கொலை செய்து அவரது உடலை பையில் வைத்துச் சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.
மும்பையில் மாடல் அழகி கொலை..!
x
மும்பையில் மான்ஷி தீட்சித் என்ற 20 வயது மாடல் அழகி நேற்று கொலை செய்யப்பட்டார். மலாட் பகுதியில் ஒரு பைக்குள் சுருட்டி வைக்கப்பட்டிருந்த அவரது உடலை மீட்ட போலீசார், இது குறித்து விசாரித்தனர். முகம் உட்பட உடல் முழுவதும் காயங்களுடன் பெட்ஷீட்டால் சுருட்டப்பட்ட நிலையில் மான்ஷியின் உடல் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த சிசிடிவி மூலமாக போலீசார் விசாரணை நடத்தினர். உடலை மீட்ட 4 மணி நேரத்தில் அந்தேரி பகுதியை சேர்ந்த சையது என்ற கல்லூரி மாணவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது இருவருக்கும் இடையிலான நட்பை மான்ஷி முறித்துக் கொண்டதால் ஆத்திரத்தில் கொலை செய்தது தெரிய வந்தது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்த மான்ஷி, 6 மாதங்களுக்கு முன்பு தான் மும்பை வந்து மாடலிங் பணி செய்து வந்துள்ளார். சையது வசித்த அடுக்குமாடி குடியிருப்பிலேயே மான்ஷி வசித்து வந்த நிலையில் இந்த கொலை நடந்துள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்