நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் டிச. 3 -வது வாரத்தில் கூட வாய்ப்பு?

தெலங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களால், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்குவதில், தாமதம் ஏற்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் டிச. 3 -வது வாரத்தில் கூட வாய்ப்பு?
x
* தெலங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களால், நாடாளுமன்ற  குளிர்கால கூட்டத்தொடர் துவங்குவதில் , தாமதம் 
ஏற்பட்டு உள்ளது. வழக்கமாக நவம்பர் மாதம், நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் துவங்கும். ஆனால், தற்போது  ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால்,  தலைவர்கள் பிரசாரத்தில்  கவனம் செலுத்தி வருகிறார்கள். 

* எனவே, நாடாளுமன்ற கூட்டத்தொடரை தள்ளிப்போடுவது குறித்து, புதுடெல்லியில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தில் ஆலோசனை நடைபெற்றது. அநேகமாக,  நவம்பர் மாத இறுதிக்கு பதிலாக, டிசம்பர் 3 -வது வாரத்தில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்க வாய்ப்பு உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்