மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் : "குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும்" - அமித்ஷா உறுதி
மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் எம்.ஜே அக்பர் அரசியலுக்கு வரும் முன்பு பல பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றி உள்ளார். அப்போது அவருக்கு கீழ் பணிபுரிந்த தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக 2 பெண் பத்திரிகையாளர்கள், அண்மையில் புகார் தெரிவித்துள்ளனர். 'மீ டூ' ஹேஷ்டேக் மூலம் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படுத்தி வரும் நிலையில், அக்பர் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தொலைக்காட்சியில் பணியாற்றும் பெண் ஒருவரும் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.
Next Story