ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா - சர்வ பூபால வாகனத்தில் சுவாமி வீதி உலா

நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளில் ஏழுமலையான் கோயில் கோபுர வடிவிலான தங்க சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா - சர்வ பூபால வாகனத்தில் சுவாமி வீதி உலா
x
நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளில் ஏழுமலையான் கோயில் கோபுர வடிவிலான தங்க சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சர்வ பூபால வாகனத்தில் சுவாமியை தரிசனம் செய்வதால் வாழ்கையில் அகங்காரத்தை ஒழித்து நிரந்தரமான பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் சுவாமி வீதிஉலாவின் போது நான்கு மாடவீதியில் திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி மனம் உருகி சுவாமியை வழிபட்டனர். இதில் ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்ட்ரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கோலாட்டம், பஜனைகள், பல்வேறு வேடம் அணிந்த பக்தர்களின் அணிவகுப்பு ஆகியவை நடைபெற்றன. 

அங்காளம்மன் கோயிலில் நவராத்திரி விழா - தனலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நவராத்திரி விழாவின் 4வது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதை ஒட்டி தனலட்சுமி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ரூபாய் நோட்டுகளுடன் காட்சியளித்த அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தங்க கருட வாகனத்தில் சீதா ராமர் வீதியுலாபுரட்டாசி மாதத்தின் இறுதி சனிக்கிழமையான நேற்று ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் தங்க கருட வாகனத்தில் சீதை சமேத ராமர் எழுந்தருளி, நான்கு ரத வீதிகளில் வீதி உலா நடைபெற்றது. நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு கொலு மண்டபத்தில் அம்பாள் பர்வதவர்த்தனி சரஸ்வதி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
Next Story

மேலும் செய்திகள்