பிரதமருக்கு கோரிக்கை வைத்து விட்டு, பேஸ்புக்கில் நேரலையில் இளம்பெண் தற்கொலை முயற்சி...

கர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் , பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துவிட்டு முகநூலில் நேரலையில் தற்கொலை முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமருக்கு கோரிக்கை வைத்து விட்டு, பேஸ்புக்கில் நேரலையில் இளம்பெண் தற்கொலை முயற்சி...
x
* கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் ஹஞ்சினாலா தாண்டா கிராமத்தை சேர்ந்த லதா என்ற இளம்பெண், முகநூலில் நேரலையில், தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். தங்கள் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டதால், கல்லூரி படிப்பை தொடரமுடியாமல் போனதாக தற்கொலைக்கு முன் லதா தெரிவித்துள்ளார். 

* இதுகுறித்து தங்கள் தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும், அமைச்சருமான, எம்.பி.பட்டீலை குடும்பத்துடன் சந்தித்து புகார் அளித்துள்ளதாகவும், பிரதமர் , முதலமைச்சர் என பலருக்கும் கடிதம் எழுதியுள்ளதாகவும் லதா தெரிவிக்கிறார். தற்கொலைக்கு முன்பும், கண்ணீருடன் கை கூப்பி சில வேண்டுகோள் விடுத்துவிட்டு, தூக்கமாத்திரைகளையும் விஷத்தையும் அருந்தியுள்ளார். 

* தற்போது லதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், மாவட்ட ஆட்சியர், போலீஸ் அதிகாரிகள் லதாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். 

* பிரதமர் மோடிக்கு வணக்கம், நான் உங்களிடம் கேட்க விரும்புவது ஒன்றுதான்...

* மகள்களின் பாதுகாப்பு, வளர்ச்சி பற்றி கூறுகிறீர்கள்... நானும் மகள் தானே...

* எனக்கு கல்வி பயிலும் உரிமை இல்லையா...? என் கல்வி பறிபோனது. கனவு கலைந்த‌து

* நான் மட்டும் ஏன் உயிருடன் இருக்க விரும்பவில்லை, அதனால் தற்கொலை செய்துகொள்கிறேன்.

Next Story

மேலும் செய்திகள்