"நாட்டின் இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு ராணுவம் தக்க பதிலடி தருகிறது"- பிரதமர் மோடி

நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
நாட்டின் இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு ராணுவம் தக்க பதிலடி தருகிறது- பிரதமர் மோடி
x
"மன் கி பாத்" எனும் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், துல்லிய தாக்குதல் நடந்து 2ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடக்கும், "பராக்கிரம பார்வ்" நிகழ்ச்சி பெரிய வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சியை கெடுக்க நினைப்பவர்களுக்கு ராணுவ வீரர்கள், எப்போதும் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்ற அவர், பேரிடர் நேரங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் விமான படை வீரர்கள் முன்னால் நிற்பதாகத் தெரிவித்தார்.

காந்தி ஜெயந்தி, இந்தியாவுக்கு முக்கியமான நாள் என்றும்,  மகாத்மாவின் கொள்கைகள் இந்தியா வளர உதவுகிறது என்றும் மோடி குறிப்பிட்டார். நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்த மகாத்மா, தேசத்திற்கு ஆற்றிய பணியை மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள் என்றும்,  காந்தி அளித்த போதனைகள் இன்றைய காலகட்டத்திற்கும் ஏற்றதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்