காஷ்மீர் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்...

காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் உள்ள காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.
காஷ்மீர் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்...
x
காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் உள்ள காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும்  தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தாக்குதலில் காவல் நிலையத்தில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தை அடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்