மாவோயிஸ்டுகளால் கொலை செய்யப்பட்ட எம்.எல்.ஏ குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு அறிவிப்பு

ஆந்திராவில் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்ட எம்.எல்.ஏ. சர்வேஸ்வர ராவ் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவோயிஸ்டுகளால் கொலை செய்யப்பட்ட எம்.எல்.ஏ குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு அறிவிப்பு
x
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு தொகுதி எம்.எல்.ஏ சர்வேஸ்வர ராவ், முன்னாள் எம்.எல்.ஏ. சோமா மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

இந்நிலையில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டர் மூலம் பலத்த பாதுகாப்புடன்,  பாடேருவில் உள்ள சர்வேஸ்வர ராவ் வீட்டிற்கு சென்றார். அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். 

சர்வேஸ்வர ராவ் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடும், அவரின் மகனுக்கு குரூப் 1 தகுதிக்கான அரசுப் பணியும் வழங்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். தெலுங்கு தேசம் கட்சி சார்பில் அவர்கள் குடும்பத்தில் உள்ள 4 பேருக்கு தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்