ஆண்களுக்கு நிகர் பெண்கள் - ராகுல் புகழாரம்

ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு, அனைத்து திறமைகளும் உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
ஆண்களுக்கு நிகர் பெண்கள் - ராகுல் புகழாரம்
x
ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு, அனைத்து திறமைகளும் உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் கர்னூல் நகரில் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், ஆண்களும் பெண்களும் சமம் என்றார். ஆனால், இந்தியாவில் பெரும்பாலான ஆண்கள், தங்களுக்கு சமமாக பெண்களை கருதுவதில்லை என ராகுல்காந்தி வேதனை தெரிவித்தார். பெண்களால், அனைத்து வேலைகளையும் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, ஆண்களை போல, பெண்களும், அனைத்து துறைகளிலும் சாதனை படைக்க வேண்டும் என்று ராகுல்காந்தி அறிவுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்