கேரள வெள்ளத்தில் இருந்து குழந்தையை காப்பாற்றிய வீரர்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள தேசியப் பேரிடர் மீட்புப் படை வீரர் ஒருவருக்கு மக்களின் பாராட்டுகள் குவிகின்றன.
கேரள வெள்ளத்தில் இருந்து குழந்தையை காப்பாற்றிய வீரர்
x
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள தேசியப் பேரிடர் மீட்புப் படை வீரர் ஒருவருக்கு மக்களின் பாராட்டுகள் குவிகின்றன. 

தண்ணீரில் மூழ்கும் பெரியாற்றுப் பாலம் வழியாக தேசிய மீட்புப் படைவீரர் கன்னையாகுமார்,  ஒரு குழந்தையைக் காப்பாற்றி அக்கரை சேர்ந்தார். அவர் சென்ற சில நிமிடங்களில் வெள்ளம் பாலத்தையே மூழ்கடித்துவிட்டது. 

அவர் குடைபிடித்த நிலையில், குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு விரைவாக நடந்து செல்லும் படம் இணைய தளங்களில் வெளியாகியுள்ளது. 

பீகாரைச் சேர்ந்த கன்னையாகுமார்,அரக்கோணம் தேசியப் பேரிடர் மீட்புப் படை முகாமில் பணியாற்றி வருகிறார். இவர் தமிழ்நாடு, மேற்குவங்கம், ஆந்திரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெள்ளம்பாதித்த பகுதிகளுக்குச் சென்று சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். இவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது

Next Story

மேலும் செய்திகள்