நிர்பயா நிதி ஒதுக்கீடு மற்றும் அதன் செலவுகள்..

2012இல் டெல்லியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஒரு மாணவி உயிரிழந்ததை அடுத்து,பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு சார்பில் நிர்பயா நிதி உருவாக்கப்பட்டது.
நிர்பயா நிதி ஒதுக்கீடு மற்றும் அதன் செலவுகள்..
x
2012இல் டெல்லியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஒரு மாணவி உயிரிழந்ததை அடுத்து,பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு சார்பில் நிர்பயா நிதி உருவாக்கப்பட்டது. பெண்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு திட்டங்களுக்கு இதில் இருந்து நிதி அளிக்கப்படுகிறது.பல துறைகளை சேர்ந்த அதிகாரிகளை கொண்ட உயர்மட்ட குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் நிர்பயா நிதியில் இருந்து திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதாக, நாடாளுமன்றத்தில், கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீரேந்திர குமார் தெரிவித்தார்.

அவசர கால உதவி அளிக்கும் திட்டத்திற்காக 321 கோடி ரூபாய் ஒதுக்கியதில், இதுவரை 273 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகையாக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான சைபர் குற்றங்களை தடுக்க 195 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதில் 94 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

 ரயில்களில் நடக்கும் வன்கொடுமைகளைத் தடுக்க உருவாக்கப்பட்ட அவசரகால உதவித் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 கோடியில், இதுவரை 150 கோடி செலவிடப்படுள்ளது. டெல்லி மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த 140 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதில், இதுவரை செலவு எதுவும் செய்யப்படவில்லை.

Next Story

மேலும் செய்திகள்