செல்போனில், தானாகவே பதிவான ஆதார் தொலைபேசி சேவை எண் - ஆதார் ஆணையம் திட்டவட்டமாக மறுப்பு
பதிவு : ஆகஸ்ட் 04, 2018, 11:38 AM
ஆதாரின் பழைய இலவச உதவி தொலைபேசி எண்ணை, ஸ்மார்ட் போன்களில் தானாகவே பதிவு செய்ய வலியுறுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதார் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆதார் ஆணையத்தின் பழைய இலவச உதவி தொலைபேசி எண், தாமாகவே செல்போனில் பதிவானதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டாளார்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து இருந்தனர். 

இதற்கு தொலை தொடர்பு நிறுவனங்கள், மொபைல் நிறுவனங்கள் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களிடம் ஆதார் ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்தி வெளியானது. 

இதனையடுத்து, வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல், அவர்கள் உபயோகிக்கும் செல்போனில் ஆதார் ஆணையத்தின் உதவி எண்ணை பதிவு செய்ய முடியும் போது, ஆதாரை பயன்படுத்தி தகவல்களை திருட முடியாது என்பதற்கு என்ன உத்தரவாதம் எனவும் பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். 

இந்த நிலையில் 1800-300-1947 என்ற இந்த செயல்படாத பழைய இலவச சேவை எண்ணை செல்போன்களில் சேர்க்க எந்த ஒரு செல்போன் தயாரிப்பு நிறுவனத்திடமோ,  தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்திடமோ வலியுறுத்தவில்லை என ஆதார் ஆணையம் சமூக வலைதளத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது. 

தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள் எனவும்  1947 என்ற சேவை தொலைபேசி எண் மட்டுமே தற்போது செயல்பாட்டில் இருப்பதாகவும் ஆதார் ஆணையம் கூறியுள்ளது.

இதுபோன்ற விஷயம் குறித்து ஆதார் ஆணையம் எந்த தொலை தொடர்பு நிறுவனத்திடமும் ஒப்பந்தம் செய்யாத நிலையில் பழைய தொலைபேசி எண் இணைவது எப்படி என்ற கேள்வி சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

1179 views

பிற செய்திகள்

தூத்துக்குடி கலவர வழக்கு - கையில் எடுத்தது சிபிஐ

தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவர வழக்கு தொடர்பாக, 20 அமைப்புகளுக்கு எதிராக, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது.

0 views

கருணாநிதி மீதான அவதூறு வழக்குகள் நிறைவு

கருணாநிதி மீதான அவதூறு வழக்குகளை முடித்து வைத்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

147 views

காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக அரசின் முதன்மை செயலாளர் நேரில் ஆய்வு

மேட்டூரில் அனல் மின்நிலையம் மற்றும் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கின் போது பாதிக்கப்பட்ட ஆத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளை தமிழக அரசின் முதன்மை செயலாளர் முகமது நசிமுதீன் நேரில் ஆய்வு செய்தார்.

166 views

புரட்டாசி அமாவாசை - ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்

புரட்டாசி அமாவாசையை ஒட்டி, கும்பகோணம் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, லட்டுகள் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

82 views

தண்ணீரில் மூழ்கியபடி ரயில்வே சுரங்க பாதையை கடக்கும் பொதுமக்கள்

ராமநாதபுரம் அருகே லாந்தை மற்றும் கருங்குளம் பகுதிகளில் உள்ள ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

250 views

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர் தற்கொலை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர் ராஜசேகர் உரக் குடோனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.

252 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.