திருப்பதி கோயில் குளத்தில் புனரமைப்பு பணி நிறைவு

திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்பக் குளத்தில் புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, குளத்தில் நீர் நிரப்பும் பணிகள் தொடங்கியுள்ளது.
திருப்பதி கோயில் குளத்தில் புனரமைப்பு பணி நிறைவு
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் 16-ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா, நவராத்திரி பிரம்மோற்சவ விழா  என இரண்டு பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

இதையொட்டி  கடந்த 10ஆம் தேதி முதல்  
திருப்பதி கோயில் தெப்பக்குளத்தை   தூய்மைப்படுத்தி, சீரமைக்கும்  பணிகள் நடைபெற்றது. தற்போது பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளதால், தெப்பக் குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணிகள் தொடங்கியுள்ளது. வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி  முதல் தெப்பக்குளத்தில் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள். 

Next Story

மேலும் செய்திகள்