படித்து கொண்டே மீன் விற்கும் கேரள மாணவி - கேலி செய்ய துவங்கிய நெட்டிசன்கள்

கேரளாவில் படித்துக் கொண்டே மீன் விற்ற மாணவியை சமூகவலைதளத்தின் மூலம் கேலி செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
படித்து கொண்டே மீன் விற்கும் கேரள மாணவி - கேலி செய்ய துவங்கிய நெட்டிசன்கள்
x
கேரளாவை சேர்ந்த மாணவி ஹனான், குடும்ப சூழல் காரணமாக கல்லூரி செல்லும் நேரம் தவிர மற்ற நேரத்தில் மீன் விற்று வருகிறார். இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் அவர் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார். அவருக்கு திரைப்படம் ஒன்றில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு சிலர் மாணவி ஹனானை கேலி செய்து கருத்துக்களை பதிவிட்டனர். இதனால் மாணவி ஹனான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

 இதனை அறிந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஹனானுக்கு எதிராக சமூக வலைதளத்தில் தவறான தகவல்களை பரப்புபவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நூருதீன் ஷேக் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். வயநாட்டை சேர்ந்த இவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்