" 2022 - க்குள் அனைவருக்கும் வீடு" - பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு

4ஆண்டுகளுக்குள் - அதாவது 2022 ம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
 2022 - க்குள் அனைவருக்கும் வீடு - பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு
x
4 ஆண்டுகளுக்குள் - அதாவது 2022 ம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நகர்புற நிலப்பரப்பு மாற்றம் குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், நகர்ப்புறங்களில், 54 லட்சம் வீடுகளும், கிராமப்புறங்களில் ஒரு கோடி வீடுகளும் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

எதிர்கால தலைமுறையினருக்காக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டு உள்ளதாகவும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்