மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிப்பு பணி தீவிரம் : வருகிற செப்டம்பர் மாதம் பணி நிறைவு
பதிவு : ஜூலை 26, 2018, 08:13 AM
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தேவையான அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் செப்டம்பர் மாதத்திற்குள் கிடைத்து விடும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.இதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், 2019ம் ஆண்டு தேர்தலுக்கு தேவையான 13 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.பணியில் தாமதம் ஏற்பட்டாலும் கூட, செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிவடைந்து விடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்த்து ரசீது வழங்கும் இயந்திரங்களும் நவம்பர் மாதத்திற்குள் கிடைத்து விடும் என தேர்தல் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

"சபரிமலை விவகாரத்தில் சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும்" - சுப்பிரமணியன் சுவாமி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்கள் அனுமதிக்கப்படும் விவகாரம் தொடர்பாக சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

51 views

"சபரிமலையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம்" - தேவசம்போர்டு தலைவர்

சபரிமலையில் நடைபெற்ற சம்பவங்களை உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.

32 views

சீரடி சாய் பாபாவின் ஆன்மிக வாழ்க்கை பயணம்...

சீரடி சாய்பாபா சமாதி நிலையை அடைந்த நூறாண்டு நினைவு தினத்தில், அவரது ஆன்மீக வாழ்க்கை பயணம் பற்றிய தகவல்கள்

102 views

நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணி : ரூ.20 கோடி சேமிப்பு - புதுச்சேரி துணை நிலை ஆளுனர் மாளிகை விளக்கம்

புதுச்சேரியில், நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகளில் சுமார் 20 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுனர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

23 views

"2022ம் ஆண்டில் விண்ணிற்கு மனிதனை இந்தியா அனுப்பும்" - 'இஸ்ரோ' தலைவர் சிவன் தகவல்

இந்தியா சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டில், விண்ணுக்கு மனிதனை அனுப்பி சாதனை படைக்கும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

65 views

"என் பெயர் ஜனனி, வயது ஒன்பது" - சபரிமலைக்கு அறிவிப்பு பதாகை ஏந்தியபடி சென்ற சிறுமி

சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு 4வது நாளான இன்று பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

5801 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.