தொடங்கியது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்

நாடாளுமன்ற கூட்டத் தொடர் மொத்தம் 18 நாட்கள் நடைபெறுகிறது
தொடங்கியது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்
x
தொடங்கியது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்

* மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் சார்பாக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்

* நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க தயார்- பிரதமர் மோடி

* மழைக்கால கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள் 



மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஏற்றார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அடுத்த மாதம் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில், முத்தலாக் ரத்து மசோதா உள்ளிட்ட 18 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீசை காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள், மக்களவை சபாநாயகரிடம் வழங்கினர். அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை, இந்தக் கூட்டத்தொடரிலேயே நடத்த வேண்டும் என சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டார். அப்போது, நம்பிக்கையில்லா தீர்மானம் அனைத்தையும்  ஒன்றாக எடுத்துக்கொள்ள வேண்டுமென மல்லிகார்ஜுனா கார்கே கோரிக்கை விடுத்தார்ர்

இதற்கிடையே, இன்று காலை அவை கூடியதும், உத்தரபிரதேசத்தில் உயிருடன் எரிப்பு சம்பவங்கள் குறித்து சமாஜ்வாடி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். 

மாநிலங்களவையில் 4 நியமன எம்.பிக்கள் பதவியேற்பு
நாடாளுமன்ற மாநிலங்களவை இன்று காலை கூடியதும், நியமன எம்.பிக்களான நடனக் கலைஞர் சோனல் மன்சிங், எழுத்தாளர் ராகேஷ் சின்ஹா, சிற்பி ரகுநாத் மொகபத்ரா, ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். 

இதையடுத்து, ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றார் சபாநாயகர்





Next Story

மேலும் செய்திகள்