கடைவீதியில் அடித்துக் கொல்லப்பட்ட அண்ணன் - காப்பாற்ற முயன்ற தம்பியை தடுத்து நிறுத்தி போலீசார்

போலீசார் முன்னிலையிலேயே படுகொலை...தனது அண்ணனை இழந்த தம்பி ஒருவர் அழுகுறலுடன் முன்வைக்கும் குற்றச்சாட்டு இது
கடைவீதியில் அடித்துக் கொல்லப்பட்ட அண்ணன் - காப்பாற்ற முயன்ற தம்பியை தடுத்து நிறுத்தி போலீசார்
x
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் உள்ள பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ்... இவரது தம்பி முருகேசன்...

இருவரும் பேரையூர் கடைவீதியில் நின்று கொண்டிருக்க, திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த 50 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று  காளிதாஸ் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது. தடுக்க சென்ற சகோதரர் முருகேசனும் தாக்கப்பட்டார். இந்த கொடூர தாக்குதலில் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்...

கொலை செய்யப்பட்ட காளிதாசின் உடல் பிரேத பரிசோதனைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அங்கே தலையில் காயத்துடன் ஓடி வந்த முருகேசன் முன்வைத்த குற்றச்சாட்டு அனைவரையும், அதிர்ச்சில் உறைய வைத்தது...

ஆம்... தன் அண்ணனின் கொலைக்கு முழு காரணமும் போலீசார் தான் என்கிறார் கொலை நடந்த போது உடனிருந்த தம்பி முருகேசன்... கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலை தடுக்க எவ்வித முயற்சியும் செய்யாமல், தடுக்க சென்ற தன்னையும் குண்டுக்கட்டாக பிடித்து காவல்நிலையம் கொண்டுவந்து விட்டனர் என கண்ணீருடன் தெரிவிக்கிறார் முருகேசன்... அந்த கும்பலுக்கு தலைவர்களான, ஆனையூர் கிராமத்தை சேர்ந்த அழகுராஜா மற்றும் அலெக்ஸ் பாண்டியன் ஆகியோரிடம் பணத்தை பெற்றுகொண்டு, கொலைக்கு போலீசாரே துணை போய்விட்டனர் என்பது முருகேசனின் குற்றச்சாட்டாக உள்ளது...

Next Story

மேலும் செய்திகள்