நேபாளத்தில் சிக்கியுள்ள புனித யாத்திரை பயணிகள் - வர்த்தக விமானம் மூலம் மீட்பு பணி தீவிரம்

நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உதவுவதற்காக 2 அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் சிக்கியுள்ள புனித யாத்திரை பயணிகள் - வர்த்தக விமானம் மூலம் மீட்பு பணி தீவிரம்
x
மோசமான வானிலை காரணமாக கைலாஷ், மானசரோவர் புனித பயணம் சென்றவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். 

சிமிகாட் நகரத்தில் 18 தமிழர்கள் சிக்கியுள்ளனர். தமிழர்கள் உள்பட புனித பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய அரசின் முயற்சியால் தமிழக பயணிகளை மீட்க வர்த்தக விமானங்களை சிமிகோட்டுக்கு நேபாள அரசு அனுப்பியுள்ளது.


ஆன்மிக பயணம் சென்ற 3 பயணிகள் உயிரிழப்பு - நேபாளத்தில் சிக்கி தவிக்கும் 300 தமிழர்கள்


கைலாஷ்- மானசரோவர் புனித யாத்திரைக்காக, நேபாளம் சென்றுள்ள 300 தமிழர்களின் கதி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. மழையில் சிக்கி கொண்டு தவிக்கும், தமிழர்களை மீட்கும் பணி, போர்க்கால அடிப்படையில் முடுக்கி விடப்பட்டு உள்ளது.  மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த ஆண்டிப்பட்டி - ராமச்சந்திரனின் உடலை, சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு, அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


டெல்லியிலிருந்து 2 தமிழக அதிகாரிகள் நேபாளம் விரைவு 

நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உதவ, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை  சேர்ந்த 2 அதிகாரிகள் நேபாள்கஞ்ச் சென்றுள்ளனர். அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் தமிழகம் வர தேவையான உதவிகளை செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் ராஜசேகரை 09868530799 என்ற எண்ணிலும், சத்யசிவத்தை 09971372239 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


"நேபாளத்தில் சிக்கியவர்களை மீட்க பாதுகாப்புதுறையும் ஒத்துழைக்கும்" - அமைச்சர் நிர்மலா சீதாராமன் 

நேபாளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க தேவைப்பட்டால் வெளியுறவுத் துறையுடன் இணைந்து பாதுகாப்புத் துறை ஒத்துழைக்கும் என மத்திய  அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.




Next Story

மேலும் செய்திகள்